தேசம்

ஒரே நேரத்தில் 11 பேருக்கு பணி ஆணை: டெல்லியை கலக்கும் மகளிர் பேருந்து ஓட்டுநர்கள்!

காமதேனு

டெல்லி போக்குவரத்துத் துறை சார்பாக அதிக அளவிலான பெண்கள் ஓட்டுநர்களாக இன்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான ஆணையை டெல்லி மாநில அரசு இன்று வழங்கியது.

டெல்லி போக்குவரத்துத் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண் ஓட்டுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு முன்வந்துள்ளது. குறிப்பாகப் பேருந்து ஓட்டுநர்களில் அதிக அளவு பெண்களை ஈடுபடுத்த அம்மாநில அரசு முடிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று 11 பெண்களுக்கு முதல் குழுவாகப் பேருந்து ஓட்டுநர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக பணிக்கு விண்ணப்பித்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சியை முடித்த 11 பெண்கள் அடங்கிய குழுவிற்கு ஓட்டுநர் பணிக்கான ஆணைகளைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் வழங்கினார். மேலும் மகளிர் இயக்கும் பேருந்துகளில் அமைச்சர் கைலாஷ் கெலாட் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

SCROLL FOR NEXT