தேசம்

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி அதிர்ச்சி

காமதேனு

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் இருந்த ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். காணாமல் போன ஆவணங்களை ஆக.25-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2021-ம்-ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த போது தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். பெண் எஸ்பி, முன்னாள் சிறப்பு டிஜிபி இடையே நடந்த உரையாடல், வாட்ஸ் அப் தகவல்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை ஆக.25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT