தற்கொலை செய்த காஞ்சனா
தற்கொலை செய்த காஞ்சனா 
தேசம்

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை: நடைமேடையில் அமர்ந்திருந்த பயணி மாரடைப்பால் மரணம்

காமதேனு

சாலை விபத்தில் உயிரிழந்த தனது மகனின்  பிரிவைத் தாங்க முடியாத தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகராட்சி சைதாப்பேட்டை பழைய காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார்  மனைவி காஞ்சனா (45). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்து விட்டதால்  காஞ்சனா தனியார் தொழிற்சாலையில் வேலை தனது ஒரே மகனான ஆனந்தை மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். ஆனந்தும் தாயார் மீது மிகுந்த அளவு கடந்த அன்பு  வைத்திருந்துள்ளார்.

கார் ஓட்டுநரான  ஆனந்த்  இருசக்கர வாகனம் ஓட்டுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று சொல்லப்படுகிறது.  இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நீண்ட தொலைவுக்கு  சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தாராம். அப்படி கடந்த 24-ம் தேதி திருச்சிக்கு நண்பர்களுடன்  சென்றபோது, விபத்து ஏற்பட்டு ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.  தனக்கிருந்த ஒரே ஆதரவும் பறிபோன நிலையில் தாய் காஞ்சனா மிகவும் சோகத்துடன் இருந்திருக்கிறார். 

இந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்ற கஞ்சனா, இரண்டாம் நடைமேடையில்  வெகு நேரம் அமர்ந்து நேற்று அழுது கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்திருக்கிறது. அப்போது ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற அந்த ரயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது.

அப்போது காஞ்சனா திடீரென எழுந்து சென்று  ரயில் முன்பு தண்டவாளத்தின் நடுவில் நின்றார். அவர் நிற்பதைக் கண்டதும்  உடனே அலாரத்தை ஒலித்தபடி பிரேக் போட்டு ரயிலை நிறுத்த ஓட்டுநர் முயன்றனர்.

ஆனாலும் நிற்காமல் காஞ்சனா மீது ரயில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதையடுத்து அவரது உடலை மீட்ட காட்பாடி ரயில்வே போலீஸார், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே நேரத்தில் நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையறிந்த ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திய போது, உயிரிழந்தவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராம்கிருபா(54) என்பதும், குடும்பத்தினருடன் வேலூருக்குச் சுற்றுலா வந்ததும் தெரிய வந்தது. இச்சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT