தேசம்

களைகட்டும் புத்தாண்டு: தமிழகத்தில் 2 நாட்களில் 400 கோடிக்கு மது விற்க இலக்கு

காமதேனு

தமிழகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களில் 400 கோடி வரை மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் அன்றாடம் 100 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனை இரண்டு மடங்கைத் தாண்டுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு பண்டிகைக்கும் மது விற்பனையை இலக்காக டாஸ்மாக் நிர்வாகம் வைத்துள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களில் 675 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருந்தது. தற்போது ஆங்கில புத்தாண்டு வருகிறது. இதனையொட்டி சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது.

இதன் காரணமாக இந்த இரண்டு நாட்களும் மது விற்பனை அதிகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களிலும் சேர்த்து ரூ.300 முதல் ரூ.400 கோடி வரையில் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT