தேசம்

விராட் கோலி, சுப்மன் கில் விஸ்வரூப ஆட்டம் - இலங்கைக்கு கடும் சவாலான இலக்கை நிர்ணயித்தது இந்தியா!

காமதேனு

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி இலங்கைக்கு கடும் சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அபாரமான சதமடித்தனர்.

இந்தியா - இலங்கை அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்கம் முதலே அபாரமாக ஆடினார்கள். மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் கில் மற்றும் விராட் கோலி அதிரடியாக ஆடினார்கள்.

இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்தினை நாலாபக்கமும் சிதறடித்த கில், 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தொடர்ந்து தெறிக்கவிட்ட விராட் கோலி 110 பந்துகளில் 13 பவுண்டரிகள் 8 சிக்சருடன் 166 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி 391 ரன்கள் என்ற மிகச்சவாலான இலக்குடன் ஆட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே இந்த தொடரை 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

SCROLL FOR NEXT