கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்  
தேசம்

மாணவர்கள் கவனத்திற்கு... கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

காமதேனு

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பிற்கான நேரடி கலந்தாய்வு வரும் ஆக்.16 ந் தேதி முதல் தொடங்கும் என கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்ககழகம் வெளியிட்டுள்ள செய்தி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு 580 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டான 15 சதவீதம் என மொத்தம் 63 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’ஆக.16 ந் தேதி விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கும்,

ஆக.17 ந் தேதி, 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும், ஆக.18 ந் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT