வாகன சோதனையில் இரவில் சிக்கிய குட்கா பண்டல்
வாகன சோதனையில் இரவில் சிக்கிய குட்கா பண்டல் 3 பேர் கைது
தேசம்

இரவில் ஒரு டன் குட்காவுடன் வந்த வாகனம்: சோதனையில் செக்போஸ்ட்டில் சிக்கிய 3 பேர்

காமதேனு

தேனி மாவட்டத்தில் போலீஸாரின் இரவு நேர வாகன சோதனையில் ஒரு டன் குட்கா பண்டல்களுடன் 3 பேர் பிடிபட்டனர்.

தேனி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீஸாருக்கு எஸ்பி டோங்ரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பல்வேறு தனிப்படையினர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்களில் 24 மணி நேரமும் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா டன் கணக்கில் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கண்டமனூர் போலீஸார் நேற்றிரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், தலா 30 கிலோ வீதம் 35 பண்டல்களில் இருந்த ஆயிரத்து 62 கிலோ குட்கா மற்றும் புகையிலைப்பொருட்களை கைப்பற்றினர். இது தொடர்பாக தேனியைச் சேர்ந்த டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT