தேசம்

பிஹாரில் வந்தே பாரத் ரயில் மீது சரமாரியாக கல்வீச்சு: பயணி படுகாயம்

காமதேனு

பிஹாரில் வந்தே பாரத் ரயில் மீது இன்று மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதில் ஒரு பயணி படுகாயம் அடைந்தார்.

மேற்குவங்க மாநிலம் ஹவுரா - நியூ ஜல்பைகுரி இடையே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சில நாட்களுக்கு முன்பு கல்வீச்சு நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாளும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசப்பட்டது. அதே போல சம்பவம் பிஹார் மாநிலம் மங்குர்ஜன் என்ற இடத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் தொடர்புடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்றும் அதுபோல ஒரு சம்பவம் பிஹாரில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் பல்ராம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்தே பாரத் ரயில் இன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த ரயில் மீது மர்மநபர்கள் கற்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சி 6 பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த கல்வீச்சில் பயணி ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் கல்வீச்சு சம்பவங்களால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT