தற்கொலை செய்து கொண்ட மோகன்
தற்கொலை செய்து கொண்ட மோகன் அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்த வண்டலூர் பூங்கா ஊழியர் தற்கொலை!
தேசம்

ஓய்வு பெற 4 நாட்களே இருக்கையில், வண்டலூர் பூங்கா ஊழியர் தற்கொலை; அதிகாரிகள் திட்டியது காரணமா?

காமதேனு

‘பூங்காவில் அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள் தான் காரணம்’ என அதிகாரிகள் மிரட்டியதால், வண்டலூர் பூங்கா ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் மோகன். இவர் பூங்கா ஊழியர்களுக்கான குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று சில அதிகாரிகள் மோகனை அழைத்து ’பூங்காவில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கிறது அதற்கு நீங்கள் தான் காரணம், இன்னும் நான்கு நாட்களில் ஓய்வு பெற உள்ளீர்கள். சார்ஜ் சீட் போட்டு விடுவோம்’ என மிரட்டினார்களாம்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மோகன் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ’தன்னுடைய மரணத்திற்கு குடும்பத்தினர் காரணம் இல்லை; அதிகாரிகள் தான் காரணம்’ என மோகன் உருக்கமாக எழுதி வைத்தததாக சொல்லப்படும் கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT