விசித்திர பணியாளர் குறித்த பகிர்வு
விசித்திர பணியாளர் குறித்த பகிர்வு 
தேசம்

'டாப் லெஸ்’ பணிப்பெண்: தினத்துக்கு ரூ.1.8 லட்சம் சம்பாதிக்கிறார்

காமதேனு

அரையாடையுடன் வீடு சுத்தம் பணியை மேற்கொள்வதற்கான பணியில் பெண் ஒருவர் தினத்துக்கு ரூ.1.8 லட்சம் சம்பாதிக்கிறார். அமெரிக்க டிக்டாக் பிரபலம் ஒருவர், இளம் தலைமுறையினர் மத்தியிலான அதிகம் வருமானம் ஈட்டும் வெறிக்கு உதாரணமாக இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா என்றில்லை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகம் சம்பாதிப்பதும், அதிகம் செலவழிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. விரைவில் பணியிலிருந்து ஓய்வு பெறவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் அதிகம் சம்பாதிக்க விரும்புகின்றனர். இதற்காக வழமையான பணிகளுக்கு அப்பால் விசித்திரமானவற்றிலும் தயக்கமின்றி ஈடுபடுகின்றனர்.

திறந்த கலாச்சாரம் கொண்ட நாடுகளில் இவை அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஷாமி என்பவர், வித்தியாசமான பெண் பணியாளர் குறித்து தனது தளத்தில் பதிவிட்டுள்ளார். வீடு தூய்மை செய்யும் பணியில் ’டாப் லெஸ்’ கோலத்தில் பெண் ஒருவர் ஈடுபடுவதும், அதற்காக அவர் மணிக்கு 300 அமெரிக்க டாலர் ஊதியம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படி தினத்துக்கு 5 வீடுகள் செல்லும் அந்த பணியாளர், மனம் மகிழும் வாடிக்கையாளரிடமிருந்து தனியாக டிப்ஸ் பெறவும் செய்கிறாராம். இது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டிருக்கும் அவர், 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறும் நிபந்தனை விதித்துள்ளாராம். வீடு சுத்தம் செய்யும் பணியின் போது, மனது குப்பையாகும் நபர்களால் தனக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்திருக்கும் இந்த பணியாளர், தனது ஊதியத்தில் 30% செலவில் தனியாக பாதுகாவலரையும் உடன் அழைத்துச் செல்கிறாராம்.

SCROLL FOR NEXT