தேசம்

பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தேடப்பட்டு வந்த சகோதரர்கள் நீதிமன்றத்தில் சரண்

காமதேனு

பெண்ணை காரில் கடத்தி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, அவரிடமிருந்து நகைகளை பறித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்த நிலையில், மேலும் இருவர் விருதுநகர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் 44 வயதான முத்துச்செல்வம். கடந்த 22-ம் தேதி மாலை விருதுநகரிலிருந்து காரில் அருப்புக்கோட்டைக்குச் சென்றார். வழியில், பாலவநத்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த நார்த்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை முத்துச்செல்வம் தனது காரில் அழைத்துச் சென்றார்.

கார் கோபாலபுரம் - பாலவநத்தம் இடையே சென்ற போது, இயற்கை உபாதையைக் கழிக்க முத்துச்செல்வம் காரை நிறுத்தினார். அப்போது, அவர்களின் பின்னால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர், முத்துச்செல்வத்தை சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் முத்துச்செல்வத்துடன் வந்த பெண்ணை தங்களின் காரில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், அப்பெண் அணிந்திருந்த 5 பவுன் நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் இச்சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சகோதரர்களான விஜய் மற்றும் பிரபாகரன் ஆகியோர் விருதுநகர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

SCROLL FOR NEXT