கைது
கைது  வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட வைரக்கல்: முன்னாள் கிராம வனக்குழு தலைவர் சிக்கினார்
தேசம்

வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட வைரக்கல்: முன்னாள் கிராம வனக்குழு தலைவர் சிக்கினார்

காமதேனு

வீட்டில் வைரல்கல் பதுக்கி வைத்து இருந்த இருவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ வைரம் மீட்கப்பட்ட நிலையில் வனத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் உள்ள கீழ்பத்தை பகுதியில் வீடு ஒன்றில் வைரக்கல்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, களக்காடு ஆய்வாளர் ஜோசப் ஹட்சன் தலைமையில் போலீஸார் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். அந்த வீட்டுக்குள் போய் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த இருவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்லவே, சந்தேகம் அடைந்த போலீஸார் வீட்டுக்குள்போய் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் அரைகிலோ வைரக்கல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸார், அந்த வீட்டில் இருந்த கீழ்பத்தை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(42), மஞ்சுவிளையை சேர்ந்த சுசில்குமார்(57) ஆகியோரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் களக்காட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனங்களைக் காப்பதில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கிராம வனக்குழுவிலும் சுசில்குமார் முன்னாள் தலைவராக இருந்தார். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட அரைகிலோ வைரக் கற்களின் மதிப்பு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். இவர்கள் மலையில் இருந்து வைரத்தை வெட்டி எடுத்தனரா? அல்லது வேறு எங்கும் இருந்து கடத்தி வந்தனரா? எனவும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT