தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம் 
தேசம்

தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

காமதேனு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை மீண்டும் 42 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 5,250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 42,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து 5,725 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. அதனால் ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT