தேசம்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது: இன்றைய விலை நிலவரம்!

காமதேனு

கடந்த சில வாரங்களாகவே ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடுவென அதிகரித்துவரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தினமும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 5,208 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 41,664 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 5,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை 75.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 75,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT