தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம் தங்கம் விலை குறைவு
தேசம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

காமதேனு

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. ஆனாலும் தங்கத்தின் விலை கிராம் 5,300 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 5,345 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 42,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து 5,831 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதனால் ஒரு கிராம் வெள்ளி இன்று கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 74.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் குறைந்து 74,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT