தேசம்

அதிக கட்டணம் வசூல்: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

காமதேனு

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை விடப் பல மடங்கு அதிக கட்டணம் வாங்குவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், கட்டணம் நிர்ணயக்குழு அறிவித்த கட்டணத்துக்கு அதிகமாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்தால், அந்த கல்லூரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த கல்லூரியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் எனத் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினருக்கு எழுதியுள்ள கடிதத்தில்," அனைத்து சுயநிதி பல்கலைக் கழகங்களும், மருத்துவக் கல்லூரிகளும் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளையும், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT