மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் கால அவகாசம்?
தேசம்

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் கால அவகாசம்?

காமதேனு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் மீண்டும் வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு வலியுறுத்தியுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின்நுகர்வோரின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது. இதற்காக முகாம் நடத்தப்பட்டது. ஆனாலும், மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனைத்தொடர்ந்து ஆதார் எண்ணை இணைக்க டிச.31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதற்காக 2,811 மின் பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கால அவகாசம் ஜன.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற உள்ளது. ஆனால், 4 நாட்களே கால அவகாசம் உள்ளது.

அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்க வாய்ப்பு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை ஜன.30-ம் தேதி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பார் என்று கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT