தேசம்

இந்தியாவில் இதுதான் முதல்முறை: விருதுநகர் ஆட்சியரின் அசத்தல் திட்டம்

காமதேனு

நாட்டிலேயே முதல்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்களின் குறைதீர்க்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசின் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்ட மக்களின் முக்கியமான அரசு சேவைகள், இணைய தள முகவரி, தொடர்பு எண் உள்ளிட்டத் தகவல்களை பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் அறிந்து பயன்பெறும் வகையில் ’விரு’ என்னும் பெயரில் தகவல் தொடர்பு மற்றும் குறைதீர் சேவை தொடர்பான 94884 00438 என்ற வாட்ஸ் அப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறை.

பொதுமக்கள் HI எனத் தொடர்புகொண்டால் அனைத்துவித அரசு சேவைகளும் அதில் காண்பிக்கப்படும். அந்தப் பட்டியலில் தங்களுக்குத் தேவையான சேவையின் ஆங்கில எழுத்தை உள்ளீடு செய்து, மொபைலிலேயே 24 மணிநேரமும் எந்த இடத்தில் இருந்தும் அரசின் சேவையைப் பெறமுடியும். இந்த குறைதீர் எண்ணை இதுவரை 5 ஆயிரம் பேர் தங்கள் செல்போனில் பதிந்து உள்ளனர். வாட்ஸ் அப் வழியே இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT