தேசம்

பரத நாட்டிய பள்ளியில் சிலைகள் திருட்டு: சிசிடிவி காட்சியால் சிக்கிய வாலிபர்கள்

காமதேனு

கோவையில் கூடுதல் மதுபானம் வாங்க பரதநாட்டியப் பள்ளியில் நடராஜர் உள்ளிட்ட சிலைகளைத் திருடிய வாலிபர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் அப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். இப்பள்ளியில் இருந்த 2 குத்துவிளக்குகள் டிச.3-ம் தேதி காணாமல் போயின. இதைக் கண்டு முரளி அதிர்ச்சியடைந்தார். இதற்கு அடுத்த நாள் டிச.4-ம் பரதநாட்டியப் பள்ளியைத் திறந்த முரளிக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பதநாட்டிய பள்ளியில் இருந்த நடராஜர் சிலை உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சிலைகள் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் முரளி புகார் செய்தார்.

இதன் பேரில் போலீஸார் சுந்தராபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பேர் சிலைகளைக் கடத்திச் செல்வது தெரிய வந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது சிலைகளைத் திருடியது சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25), கிரண்((22) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுபோதையில் கூடுதல் மதுபானம் வாங்க இருவரும் சிலைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT