ரயில் விபத்து  
தேசம்

அறிவிப்பு… ரயில் விபத்து நிவாரணம் 10 மடங்கு உயர்வு

காமதேனு

ரயில் விபத்து நிவாரணமானது 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆளில்லா லெவல் கிராசிங் விபத்துகளில் இறந்த பயணிகளின் உறவினர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். சாதாரண காயம் உள்ள பயணிகளுக்கு முன்பு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இனிமேல் 50,000 ரூபாய் வழங்கப்படும்.

நிவாரணம்

தீவிரவாத தாக்குதல், வன்முறை தாக்குதல் மற்றும் ரயிலில் கொள்ளை போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முன்பு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த தொகை தற்போது ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.50 ஆயிரமும். காயம் அடைந்தவர்களுக்கு முன்பும், இப்போதும் ரூ.5,000 வழங்கப்படும்.

ரயில்

ரயில் விபத்துகள் ஏற்பட்டால் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு 10 நாள் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தினத்திற்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் ரூ.3 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும்.

விரும்பத்தகாத சம்பவத்தில் கடுமையான காயம் ஏற்பட்டால், ஒவ்வொரு 10 நாள் காலத்தின் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியின் முடிவில் ஒரு நாளைக்கு ரூ.1,500 விடுவிக்கப்படும். மேலும் ஆறு மாதங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து நிதி உதவி செய்யப்படும்.

அதன்பிறகு அடுத்த 5 மாதத்திற்கு ஒவ்வொரு 10 நாள் காலத்தின் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியின் முடிவில் ஒரு நாளைக்கு ரூ.750 நிதி வழங்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT