தேசம்

திருக்குறள் வழியில் திருமணம்: மக்களை ஆச்சரியப்படுத்திய மணமக்கள்!

காமதேனு

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இன்று நடைபெற்ற கல்யாணம் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. அதற்குக் காரணம் திருக்குறள் வழியில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்திலேயே கல்யாண பெண்ணும், மாப்பிள்ளையும் சென்ற இடமும் கவனம் குவித்துள்ளது.

வீரவநல்லூரைச் சேர்ந்தவர் விசயராகவன். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தீபிகா. இவர்கள் இருவருக்கும் இன்று காலையில் வீரவநல்லூர் பகுதியில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருக்குறள் வழியில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தை தமிழறிஞர் குமார சுப்பிரமணியம் நடத்திவைத்தார். திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும், மணக்கோலத்திலேயே வீரவ நல்லூர் பகுதியில் இருக்கும் அரசு கிளை நூலகத்திற்குச் சென்றனர். மேலும், அங்கு அருகாமை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வாசகராகச் சேர்வதற்கான சந்தா தொகையும் கட்டினர்.

நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள், நூலக அலுவலர்கள் மட்டுமல்லாது இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த ஓவிய ஆசிரியர் பொ.வள்ளிநாயகம், பாப்பாக்குடி முருகன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் நூலகம் சென்றதும், மாணவர்களை உறுப்பினர்களாக சந்தா கட்டியதும் வீரவநல்லூர் சுற்றுவட்டார மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

SCROLL FOR NEXT