அலுவலக கதவை திறக்கும் தலைமை ஆசிரியை
அலுவலக கதவை திறக்கும் தலைமை ஆசிரியை 
தேசம்

`வேலை செய்யக்கூடாது; வெளியே வாருங்கள்'- மறுத்த அலுவலரை பள்ளிக்குள் வைத்து பூட்டிச்சென்ற தலைமையாசிரியை

காமதேனு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளரை பள்ளி அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தலைமை ஆசிரியரால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

அரவக்குறிச்சியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை பணிபுரிவது வழக்கம். இந்தநிலையில், பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் செல்வ கதிரவன் என்பவர் எப்போதும் மாலை 4.15க்கு மேலும் வேலை இருப்பதாகக் கூறி வேலை செய்து வந்துள்ளார்.

அதனால் தலைமை ஆசிரியை உமாவும் தினமும் அவர் வேலை முடிக்கும் வரையில் பள்ளியில் இருக்க வேண்டியிருந்தது. இதனால் வெறுப்பில் இருந்த அவர் நேற்று 4.15 மணிக்கு மேல் வேலை செய்யக் கூடாது. அலுவலகத்தை பூட்டவேண்டும் வெளியே வாருங்கள் என செல்வ கதிரவனிடம் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கதிரவன் வேலை இருக்கிறது. 5.30 மணிவரை இருந்தாக வேண்டும். பள்ளியை பூட்ட வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் செல்வ கதிரவன் அலுவலகத்தை விட்டு வெளியேறவில்லை. இந்தநிலையில், தலைமை ஆசிரியை உமா, அவரை பள்ளி அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு சென்று விட்டார். இதனால் பள்ளி வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செல்வ கதிரவன் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களுக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் தலைமை ஆசிரியையிடம் பேசி அவரை மீண்டும் பள்ளிக்கு வரவைத்து கதவை திறந்து விடச் செய்தனர்.

இளநிலை உதவியாளரை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் வைத்து தலைமை ஆசிரியை பூட்டிச்சென்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT