அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: குற்றலாம் வந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
தேசம்

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: குற்றாலம் வந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

காமதேனு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர். இந்த நிலையில், குற்றாலம் மெயின் அறிவிக்கும், சிற்றருவிக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் அளவுக்கு அதிகமாக துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் வாசிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே, அவர்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது ஒரு பெரிய மரத்தின் அடியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே சம்பவம் குறித்து குற்றாலம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில், குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் விரைந்து வந்து மரத்தின் அடியில் கிடந்த ஆண் சடலத்தை ஆய்வு செய்தார். சடலமானது முற்றிலும் அழகிய நிலையில் இருப்பதால் காயங்கள் ஏதும் தென்படவில்லை எனவும், உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் அது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தெரியவரும் எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் குற்றாலம் மெயின் அருவி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT