வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான்
வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் 
தேசம்

என்.ஐ.ஏ சோதனை அவசியமானது என மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்: வஃக்பு வாரிய தலைவர் பேட்டி

காமதேனு

என்.ஐ.ஏ சோதனை என்பது தமிழகத்தில் சில அதிகாரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. அதில் உண்மை இல்லை என்பதையும் அவசியமானது என்பதையும் மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழக வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

வஃக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்ய தமிழக வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் பழநி வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் வஃக்பு வாரிய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு சொத்துக்களை சட்டப்பூர்வ அடிப்படையில் மீட்கும் பணி நடந்து வருகிறது.

பல ஆண்டுகளாக சிறைகளில் உள்ள முஸ்லீம்களை விடுவிக்க கோருவது என்பது ஒரு சமுதாய பிரச்சினையாக பார்க்க வேண்டும். இது தொடர்பாக நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையினை அளித்துள்ளது. மேலும் ஆளுநரின் ஒப்புதலோடு அவர்களை விடுவிப்பதற்கான முயற்சி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளோம்.

தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனை என்பது முஸ்லீம் சமூக இளைஞர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு சில அதிகாரிகளால் நடத்தப்படுவது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என்பதையும், இந்த சோதனை அவசியமானது என்பதையும் என்.ஐ.ஏ அமைப்பும் மத்திய அரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று கூறினார்.

SCROLL FOR NEXT