நீதிமன்ற உத்தரவு 
தேசம்

சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஸ்பெண்ட்... உயர் நீதிமன்றம் அதிரடி!

காமதேனு

சிறப்பு நீதிமன்ற நீதிபதியை சஸ்பெண்ட் செய்து, தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று அதிரடி நடவடிக்கை மேற்கொள்கிறது.

நாம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஜெயகுமாரை, தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று(ஆக.24) இடைநீக்கம் செய்தது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், நீதிமன்ற வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிசெய்துள்ளன.

அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை வழங்கி குளறுபடி செய்திருப்பதாக, ராகவேந்திர ராஜு என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜெயகுமார் விசாரித்து வந்தார். அதில் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் உட்பட சிலர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு மஹ்பூப் நகர் போலீசாருக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. ஜெயகுமார் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

தெலங்கானா உயர் நீதிமன்றம்

சிறப்பு நீதிபதியின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் கமிஷன் போன்ற அதிகார அமைப்புடன் நீதிமன்றத்தின் உரசல் மற்றும் அதிகார தலையீடுக்கு மோசமான உதாரணமாக இந்த விவகாரம் ஆளானது. மேலும் அடிப்படை ஆதாரங்கள் எதுவுமின்றி தேர்தல் ஆணையர் மீது காவல்துறை நடவடிக்கைக்கு சிறப்பு நீதிபதி உத்தரவிட்டது தவறான போக்கு என்றும் விமர்சனம் எழுந்தது.

இதனிடையே, வேட்புமனு தாக்கல் தொடர்பான ஆவணங்களை குளறுபடி செய்ததில் தனக்கு எந்த பங்கும் இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் தெலங்கானா உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். இதனை அடுத்தே சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயகுமாரை சஸ்பெண்ட் செய்து தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

SCROLL FOR NEXT