கைது செய்யப்பட்ட விஜயராகவன்.
கைது செய்யப்பட்ட விஜயராகவன். 
தேசம்

கழுத்தை அறுத்து கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர்: சிசிடிவி காட்சியால் சிக்கிய சலூன் கடை ஓனர்

காமதேனு

வேலூரில் அசாம் மாநில இளைஞரை சவரக்கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சலூன் கடை உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கல்லூரி அருகே தனியார் வணிக கட்டிடத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபனி சரணியா என்ற வாலிபர் கழுத்தில் வெட்டுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த விருதம்பட்டு போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அபனி சரணியா உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், அபனியை யார் கொலை செய்தது என விசாரிக்கத் தொடங்கினர்.

இதையடுத்து காட்பாடி பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அபரனி சரணியா வெட்டப்பட்ட அன்று காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அவர் வெளியே வருவது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி போலீஸார் ஆய்வு செய்த போது, வேலூர் ஆக்ஸிலிம் கல்லூரி ரவுண்டனா அருகே சலூன் கடைக்குள் அபனி சரணியா உள்ளே செல்வதும், பின்னர் 40 நிமிடங்கள் கழித்து கழுத்தில் கையை வைத்துக்கொண்டு வெளியே வருவதும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் சம்பந்தப்பட்ட சலூன் கடைக்குச் சென்று விசாரணை நடத்திய போது அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கடையை நடத்தும் விஜயராகவனிடம், அபனி சரணியா முடி வெட்டியுள்ளார்.

அதற்குப் பணம் கேட்ட போது, தன்னிடம் பணமில்லையென்று அபனி சரணியா தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், விஜயராகவன் சவரக்கத்தியால் அபனியை கழுத்தில் அறுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் இன்று கைது செய்தனர். சிசிடிவி காட்சியின் மூலம் கொலையாளியை கைது செய்த போலீஸார் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT