மாணவியின் சட்டையை துவைக்கும் ஆசிரியர்.
மாணவியின் சட்டையை துவைக்கும் ஆசிரியர். 
தேசம்

5-ம் வகுப்பு மாணவியின் சட்டையைக் கழற்ற வைத்த ஆசிரியர்: புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பதிவிட்டதால் கல்வித்துறை அதிரடி

காமதேனு

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை ஆசிரியர் சட்டையைக் கழற்ற வைத்து 2 மணி நேரமாக அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாதால் மாவட்டத்தில் பழங்குடியினர் விவகாரத்துறை சார்பில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றியவர் ஷ்ரவன் குமார் திரிபாதி. வகுப்புக்கு வந்த மாணவி ஒருவரின் சீருடை அழுக்காக இருந்துள்ளது என்று அவரின் சட்டையை வகுப்பறையில் கழற்றச் சொல்லியுள்ளார். 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பழங்குடி மாணவி, அரைநிர்வாண நிலையில் இருந்துள்ளர்ர. அத்துடன் மாணவி கழற்றிய சட்டையை பள்ளியிலேயே ஆசிரியர் சோப் போட்டு துவைத்துள்ளார். அதை மாணவி உள்ளிட்ட மாணவர்களைப் பார்க்க வைத்துள்ளார். இதைப்புகைப்படங்களாக எடுத்து பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் வாட்ஸ் அப் குரூப்பில் அந்த ஆசிரியரே பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தின் கீழே, தன்னைத் தூய்மை தன்னார்வலர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ஆனந்த் ராய் சின்ஹா, உடனடியாக ஆசிரியர் ஷ்ரவன் குமார் திரிபாதியை இடை நீக்கம் செய்துள்ளார். இதுகுறித்து தொகுதியின் கல்வி அதிகாரி நீலம் சிங் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆசிரியர் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT