தேசம்

வகுப்பறையில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

காமதேனு

வகுப்பு ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில் 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பில் படிக்கும் 13 மாணவர்களை ஆசிரியர் நேற்று கொடூரமாக தாக்கினார். இதில் காயமடைந்த 13 மாணவர்களையும் வகுப்பறையில் ஆசிரியர் பூட்டி வைத்துள்ளார். இதன் பின்பே, காயமடைந்த அந்த மாணவர்கள் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அந்த மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பெற்றோர் காவல் நிலையம் மற்றும் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு வெளியே பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றி ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், " கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர், மிருகமாக மாறி சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டு நடந்து கொண்டார் " என்று குற்றம் சாட்டினர். நடனமாட ஆசிரியர் வலியுறுத்தியதாகவும், அதை மாணவர்கள் மறுத்ததால் ஆசிரியர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கும்லா முழுவதும் பரவியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 13 மாணவர்களிடமிருந்து புகார்களை நிலைய அலுவலக அதிகாரி அசுதோஷ் சிங் பெற்றுள்ளார். " இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதற்கிடையில், பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில், தொகுதி மேம்பாட்டு அதிகாரி ஷிஷிர் குமார் சிங்கும் இந்த விஷயத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவின் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் அவர் உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT