தேசம்

என்ஜிஓக்களில் பெண்கள் பணிபுரிய தடை: ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு உத்தரவு

காமதேனு

ஆப்கானிஸ்தானில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் (என்ஜிஓ) பெண் ஊழியர்கள் பணிசெய்வதை தடை செய்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

தலிபான் அரசின் பொருளாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் ஹபீப் எழுதியுள்ள கடிதத்தில், பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீடு குறித்த தலிபான் நிர்வாகத்தின் அறிவிப்பினை சிலர் கடைப்பிடிக்காததால், மறு அறிவிப்பு வரும் வரை என்ஜிஓக்களில் பெண் ஊழியர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த உத்தரவு ஆப்கானிஸ்தானில் அதிக அளவில் இருக்கும், ஐக்கிய நாடுகளின் சபையின் நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுமாறு சில நாட்களுக்கு முன்பு தலிபான் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு உலகளவில் கடும் கண்டனங்கள் எழுந்தது. இது ஆப்கானிஸ்தானுக்குள்ளும் மக்களிடம் எதிர்ப்புகளையும், கடுமையான விமர்சனங்களையும் தூண்டியுள்ளது.

SCROLL FOR NEXT