தேசம்

சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கோயில் உண்டியல் வசூல் 2 கோடியைத் தாண்டியது

காமதேனு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் 2 கோடியே 22 லட்ச ரூபாய் காணிக்கையாக வந்திருந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வது வழக்கம். அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பொதுவாகவே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைப் பணம் மாதத்திற்கு இருமுறை எண்ணப்படும். இந்நிலையில் சூரசம்ஹாரம் நிகழ்வுக்குப் பின்பு இப்போது முதன்முதலாக எண்ணப்பட்டது.

கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் முருகன் தலைமையில் நடந்த உண்டியல் எண்ணும் பணியை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் கடந்த இரு நாள்களாக நடந்துவந்த உண்டியல் எண்ணும் பணி இன்று நிறைவடைந்தது. இதில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 75,893 ரூபாய் காணிக்கையாக வந்திருந்தது. இதேபோல் ஒருகிலோ 193 கிலோ அளவிலான தங்கம், 15 கிலோ வெள்ளி, 234 வெளிநாட்டுப் பணம் ஆகியவை உண்டியல் காணிக்கையாக வந்திருந்தது.

SCROLL FOR NEXT