தேசம்

36 யூடியூப் சேனல்களுக்கு சம்மன்: கள்ளக்குறிச்சி வழக்கில் அதிரடி

காமதேனு

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண வழக்கில் 36 யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் அந்த சேனல்களுக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக சமூக ஊடங்களில் விவாதம் நடத்தியது, வதந்தி பரப்பியது, கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிடல், வன்முறையைப் பரப்பியது, உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டது என 36 யூடியூப் சேனல்கள் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் இந்த சேனல்களுக்கு சம்மன் அனுப்பியதோடு விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT