தேசம்

மிசோரமில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் - பதற்றத்தில் தவிக்கும் மக்கள்!

காமதேனு

மிசோரமில் இன்று காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக பதிவானது. கடந்த சில நாட்களாகவே ஜப்பான், மியான்மர் போன்ற நாடுகளில் பயங்கர நிலக்கடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

மிசோரம் மாநிலத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 7 மணி அளவில் மிசோரம் மாநிலம் லங்க்லே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக பதிவானது. லங்க்லே பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம்

இதேபோல் நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 3.9 ஆக பதிவானது. ஜம்மு காஷ்மீரில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. ஜப்பான் நிலநடுக்கத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT