ஏடிஎம் மையங்களில் உதவுவது போல திருட்டு
ஏடிஎம் மையங்களில் உதவுவது போல திருட்டு ஏடிஎம் மையங்களில் உதவுவது போல இருவரிடம் பணம் திருட்டு: சிசிடிவிகளைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை
தேசம்

ஏடிஎம் மையங்களில் இருவரிடம் பணம் திருட்டு: உதவுவது போல கைவரிசை காட்டியவர் யார்?

காமதேனு

தருமபுரி மாவட்டத்தில் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாதவர்களுக்கு உதவுவது போல் நடித்து, நூதன முறையில் பணத்தைத் திருடிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் உள்ள குண்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முனியம்மாள். இவர் நேற்று மாலை பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக பணத்தை எடுக்கத் தெரியவில்லை.

இந்நிலையில் முனியம்மாளுக்கு அடுத்து அதே ஏடிஎம்மில் பணம் எடுக்கச்சென்ற நபர் ஒருவர் முனியம்மாளுக்கு உதவுவதாக நடித்து 8500 ரூபாயைத் திருடிவிட்டார்.

இதேபோல் எர்ரசிக அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(28). இவர் லோடு ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் சென்ற ஏடிஎம்மில் பணம் வரவில்லை. அப்போது அவருக்குப் பின்னால் நின்றவர் நான் பணம் எடுத்துத் தருகிறேன் என ஏடிஎம் கார்டை வாங்கி எடுத்தார். பணம் எடுத்த பின்பு, ராஜீவ்காந்திக்கு அவரது ஏடிஎம் கார்டுக்குப் பதில் வேறு கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார். ராஜீவ்காந்தியும் இதைக் கவனிக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 38 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர்தான் ஈடுபட்டாரா என்பது குறித்து பாலக்கோடு போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT