தேசம்

கள்ளக்குறிச்சி கலவரம்: சிறப்புப் புலனாய்வு குழு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய 3 பேர்!

ரஜினி

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இதுவரை 16 பேரை கைது செய்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் குழுக்கள் கலவரம் ஏற்படுத்தியதாக இன்று 3 பேரை கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தையொட்டி கலவரம் ஏற்பட்டது. இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.. இக்குழு இதுவரை விசாரணை நடத்தி கலவரம் சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேரை கைது செய்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பித்து கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துரைபாண்டி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று கைது செய்தனர். மேலும் குழுவில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களைப் பதிவிட்டதாக அய்யனார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை சிறப்பு புலனாய்வு பிரிவினர் கலவரம் மற்றும் அரசு பொது சொத்துக்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக 13 பேர்களையும், வாட்ஸ் அப் குழு அமைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக 3 பேர் என மொத்தம் 16 பேரை கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT