மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேசவன். தண்டவாளத்தைக் கடந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கால் துண்டானது: ரயில் மோதி விபத்து
தேசம்

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கால் துண்டானது: ரயில் மோதி விபத்து

காமதேனு

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கால் துண்டான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கேசவன்(55). இவர் ராயபுரம் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரை கடந்த மாதம் போக்குவரத்து பிரிவில் இருந்து சட்ட ஓழுங்கு பிரிவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் சென்னை காவல் ஆணையரை சந்தித்து தனது உடல்நலம் குறித்து தெரிவித்து பரிமாறுதல் ஆணையை ரத்து செய்யவேண்டும் என மூன்று நாட்களாக ஆணையர் அலுவலகத்திற்கு கேசவன் வந்து சென்றுள்ளார்.

கேசவன் அடையாள அட்டை.

மேலும் கேசவன் பணிமாறுதல் செய்யப்பட்டதால் அவர் பயன்படுத்திய கணினியை வேறு ஒருவருக்கு மாற்றி கொடுக்கம்படி ஆய்வாளர் கௌசல்யா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கேசவன் இன்று காலை தண்டையார்பேட்டையில் இருந்து பேசின் பிரிட்ஜ்க்கு ரயிலில் வந்ததுள்ளார்.

பின்பு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது பயணிகள் ரயில் மோதியது. இதில் கேசவனின் இடது கால் துண்டானது. இதனைப் பார்த்த சகபயணிகள் உடனே ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் கேசவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கேசவன் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்ததும் கடந்த 1997-ம் ஆண்டு மதுரையில் நடந்த இமாம் அலி என்கவுன்டர் வழக்கில் இவரது உடம்பில் பல குண்டுகள் பாய்ந்து சிகிச்சை பெற்றதும் தெரிய வந்தது. அத்துடன் அதில் ஒரு குண்டு இன்னும் அவர் உடம்பில் இருப்பதால் அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கேசவனை கடந்த மாதம் சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்ததால் காவல் ஆணையரை சந்தித்து பணிமாறுதலை ரத்து செய்ய வேண்டி கடந்த மூன்று நாட்களாக ஆணையர் அலுவலகம் வந்து செல்வது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT