தேசம்

இவர்கள் மாந்திரீகம் செய்ததால் தான் அப்பாவிற்கு உடல்நலன் பாதித்தது: மாமனார், மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன்

காமதேனு

இவர்கள் மாந்திரீகம் செய்ததால் தான் தன் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்ற சந்தேகத்தில் தனது மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகன், கூலிப்படையைச் சேர்ந்த வாலிபருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் கியோஞ்சார் மாவட்டம், டைதாரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பஹாடா முர்மு(45), அவரது மனைவி தானி முர்மு (35) ஆகியோர் வீட்டு வாசலில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரத்தவெள்ளத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தபோலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாருக்கு, கொலை செய்யப்பட்ட பஹாடாவின் மருமகன் தனேஷ்வர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," சில மாதங்களுக்கு முன்பு தனேஷ்வரின் தந்தை நோய்வாய் பட்டார். பஹாடா மாந்திரீகம் செய்ததால் தான் தன் தந்தை பாதிக்கப்பட்டதாக தனேஸ்வர் கருதினார். அத்துடன் பஹாடாவிற்கும், தனேஷ்வருக்கும் நிலம் தொடர்பான பிரச்சினையும் இருந்துள்ளது.

இதனால் பஹாடா முர்மு மற்றும் அவரது மனைவி தானி முர்முவை கொலை செய்ய தனேஷ்வர் திட்டமிட்டார். இதற்காக 10 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து கூலிப்படையைச் சேர்ந்த ரபி ஹெம்ப்ராமை தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து தம்பதியைக் கொலை செய்துள்ளனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த இரட்டைக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம்" என்றனர். ஒடிசாவில் நடைபெற்ற இந்த இரட்டைக்கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT