கங்கை நதியை நோக்கி வந்த வீரர்கள்.
கங்கை நதியை நோக்கி வந்த வீரர்கள். பாலியல் பாஜக எம்.பியை கைது செய்யக்கோரி பதக்கங்களை கங்கையில் வீச வந்த வீரர்கள்!
தேசம்

பாலியல் பாஜக எம்.பியை கைது செய்யக்கோரி பதக்கங்களை கங்கையில் வீச வந்த வீரர்கள்!

காமதேனு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பியை கைது செய்ய வலியுறுத்தி, இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தாங்கள் பெற்ற பத்தகங்களை கங்கை நதியில் வீசச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருக்கும் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது 18 வயதுக்கு குறைவான மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்ய வலியுறுத்தி மே 23-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மே 28-ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டி டத் திறப்பு விழாவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

இதனால் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திய போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளை போலீஸார் கைது செய்தனர். அத்துடன் வீராங்கனை பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீஸார் நேற்று அறிவித்தனர்.

இந்த நிலையில்,பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டமாக தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் இன்று வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் அறிவித்தனர்.

அதன்படி, தாங்கள் பெற்ற ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை கங்கை நதியில் வீச இன்று வீரர்கள், வீராங்கனைகள் குவிந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

உத்தராகண்ட்டில் உள்ள ஹரித்வார் கங்கை பகுதிக்கு மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் பதக் கங்களை வீச வந்த போது போலீஸார் அவர்களைத் தடுத்தனர். அப்போது வீரர்களிடம் விவசாய சங்கத்தலைவர் நரேஷ் தகைத் மற்றும் பஞ்சாயத்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடுமையாக உழைத்து வாங்கிய பதக்கங்களை ஆற்றில் வீசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன், அந்த பதக்கங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும், 5 நாட்கள் அவகாசம் கொடுங்கள் விரைவில் நீதி கிடைக்கும் என்றும் அவர்கள் சமாதானப்படுத்தினர். விவசாய சங்க பிரதிநிதிகளின் நீண்ட பேச்சுவாத்தைக்குப் பின் வீரர், வீராங்கனைகள் சமாதானமடைந்தனர். இதன் பின் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஹரித்வார் பகுதியில் பரபரப்பு நிலவியது.

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே ஆதரவு

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், " மே 28?ம் தேதி நமது நாட்டின் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தாக்கப்பட்ட செய்திகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சரியான பேச்சு வார்த்தைகள் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். மல்யுத்த வீராங்கனைகள் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். மல்யுத்த வீரர்களி போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கும்ப்ளேயின் ஆதரவு குரலை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT