தேசம்

விசாரிக்கச் சென்ற இடத்தில் இளம்பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் செய்த அதிர்ச்சி காரியம்: காவல் துறை எடுத்த அதிரடி நடவடிக்கை

காமதேனு

விசாரணைக்குச் சென்ற இடத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காவல் துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் சொத்து தகராறு தொடர்பாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறை ஆய்வாளர் அய்னுல் ஹோக், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதன் பின் புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், புகார் செய்த இளம்பெண்ணின் வீட்டிற்கு காவல் துறை ஆய்வாளர் அய்னுல் ஹோக் விசாரணைக்காக சென்றார். அப்போது அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதுடன், தவறான அறிகுறிகளைக்காட்டி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் , காவல் துறை ஹெல்ப் லைன் எண்ணுக்கு போன் செய்து நடந்தவற்றைத் தெரிவித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில், கொல்கத்தா காவல்துறை தலைமையகம் விசாரணையைத் தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளர் அய்னுல் ஹோக்கை இன்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT