மூத்த வாக்களர்கள் 
தேசம்

இவர்கள் மட்டும் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்: இந்திய தேர்தல்களில் புதிய அறிமுகம்!

காமதேனு

80 வயதுக்கு மேலானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அறிமுகமாக உள்ளது.

மே மாதம் சட்டப்பேரவை தேர்தலுக்காக கர்நாடக மாநிலம் மும்முரமாக தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக தேர்தல் ஆணையமும் களத்தில் இறங்கி உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக குறிப்பிட்டோருக்கு மட்டும், வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதியினை தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாதோர் தங்கள் வீட்டிலிருந்தே ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியும்.

இதற்கென முன்கூட்டியே பதிவு செய்துகொண்டால், தேர்தல் அதிகாரிகள் நேரிடையாக வாக்காளரின் வீட்டுக்கே வந்து, 12டி படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமாக வாக்களிப்பை நிறைவு செய்ய உதவுவார்கள். இந்த நடைமுறை முழுக்க பதிவு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் உள்ளிட்ட சகல வசதிகளும் வாக்குச்சாவடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படியும் நேரில் வர இயலாதவர்கள் இந்த வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT