-
-
தேசம்

என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு: கேரளத்தில் எஸ்.டி.பி.ஐ வன்முறை: ஹெல்மெட் போட்டு அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்

காமதேனு

பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள், முக்கியத் தலைவர்களின் இல்லங்களில் நேற்று இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

ஆனால் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் கேரளத்தில் வழக்கம்போல் பெரும்பாலான கடைகளும் திறந்திருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை வழக்கம்போல் இயங்கின. இதேபோல் அரசுப்பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு அடித்தளம் இருக்கும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான கோழிக்கோடு, மளப்புரம், வயநாடு, கண்ணூர், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்துகளின் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. கல்வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து, கேரளத்தில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் பேருந்துகளின் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு மத்தியில் ஆலுவா பகுதியைச் சேர்ந்த கேரள அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் தன் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை ஓட்டும் காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

SCROLL FOR NEXT