யோகா
யோகா சவுதி அரேபியா பல்கலைக்கழகங்களில் யோகாவை அறிமுகப்படுத்த திட்டம்!
தேசம்

சவுதி அரேபியா பல்கலைக்கழகங்களில் யோகாவை அறிமுகப்படுத்த திட்டம்!

காமதேனு

மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக சவுதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் யோகாவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களுடன் அடுத்த சில மாதங்களில் யோகா பயிற்சியை தொடங்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று சவுதி யோகா கமிட்டியின் தலைவர் நௌஃப் அல்-மர்வாய் தெரிவித்துள்ளார்.

‘சவுதி பல்கலைக்கழகங்களில் புதிய விளையாட்டுகளின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு’ என்ற தலைப்பில் நான்காவது அமர்வில் பங்கேற்ற போது, பல்கலைக்கழகங்களில் யோகாவை அறிமுகப்படுத்த கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும், ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்காக யோகா பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் அல்-மர்வாய் கூறினார்.

அவர், "யோகா அதன் பயிற்சியாளர்களுக்கு உடல் மற்றும் மன நலன்களுக்காக பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. விஷன் 2030 ஐ அடைவதற்கான மிக முக்கியமான தூண்களில் ஒன்று விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்பதை மேம்படுத்துவது ஆகும். சிலர் நம்புவது போல் யோகா என்பது தியானம் மற்றும் தளர்வு மட்டுமல்ல. அதில் ஆசன பயிற்சி, பிராணயாமா சுவாச நுட்பங்கள், தசை கட்டுப்பாடு, யோகா நித்ரா தியானம் மற்றும் தளர்வு ஆகியவை அடங்கும்" என்று அவர் கூறினார்.

கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் சவுதி பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'விளையாட்டுகளில் அரசின் பார்வையை ஆதரிப்பதில் பல்கலைக்கழக விளையாட்டுகளின் பங்கு' என்ற தலைப்பில் சமீபத்தில் ரியாத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

SCROLL FOR NEXT