ராமேஸ்வரம் கோயில் கொடியேற்றம்
ராமேஸ்வரம் கோயில் கொடியேற்றம் மகாசிவராத்திரி திருவிழா
தேசம்

ராமேஸ்வரம் கோயில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காமதேனு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மகாசிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமைகளுடன் காசிக்கு அடுத்தபடியான புண்ணிதலமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் திகழ்கிறது. இங்கு ஆடி, மாசி திருவிழா சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு மாசி களரி எனப்படும் மகாசிவராத்திரி திருவிழா, ராமநாதசுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதைதொடர்ந்து தங்க கொடி மரம், ராமநாதசுவாமி, ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும் 18-ம் தேதி வரை 12 நாள் திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான, தேரோட்டம் பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ளது. பிப்.20-ல் அமாவாசையையொட்டி, தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT