தேசம்

ராமஜெயம் கொலை வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

காமதேனு

ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நிலை அறிக்கையைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இன்று தாக்கல் செய்தனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான  ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். கல்லணை செல்லும் சாலையில் பொன்னி டெல்டா பகுதியில் உடலை கைப்பற்றிய போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வந்தனர். 12 தனிப்படைகள், சிபிசிஐடி விசாரணை எனத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அந்த கொலை வழக்கில் மர்மம் இன்னும் விலகவில்லை. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணை செய்துவரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கின் விசாரணை நிலை அறிக்கையைச் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து டிசம்பர் 20-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SCROLL FOR NEXT