கோடீஸ்வரரான பஞ்சாப் விவசாயி ஷீத்தல் 
தேசம்

4 மணி நேரத்தில் அடித்த அதிர்ஷ்டம்… கோடீஸ்வரரான பஞ்சாப் விவசாயி!

காமதேனு

பஞ்சாபை சேர்ந்த விவசாயி ஒருவர் 4 மணி நேரத்தில் இரண்டரை கோடி ரூபாய்க்கு அதிபதியாக மாறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மகில்பூரை சேர்ந்தவர் ஷீத்தல் சிங். விவசாயியான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில் இவரது மகன்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருந்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது க்ரீன் வியூ பூங்காவிற்கு வெளியே உள்ள கடையில் இருந்து ஒரு லாட்டரி சீட்டும் வாங்கினார்.

விவசாயி ஷீத்தல்

இதனையடுத்து, வீட்டிற்கு சென்ற இவர் தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்தார். 4 மணி நேரம் கழித்து ஷீத்தலை தொடர்பு கொண்ட லாட்டரி கடை உரிமையாளர், அவருக்கு ரூ.2.5 கோடி பம்பர் பரிசு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன ஷீத்தல் தனது உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு இனிப்பு வழங்கி குடும்பத்துடன் கொண்டாடினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீத்தல், தனது வீட்டில் மகிழ்ச்சி நிலவுவதாகவும், தனக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான பொதுமக்கள் வீட்டில் குவிந்து வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், பரிசுத்தொகையை எப்படி செலவு செய்வது என்பது குறித்து தன் குடும்பத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இவருக்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்த கடைக்காரர் கூறும் போது, 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாகவும், இதுவரை தனது கடையில் லாட்டரி சீட்டு வாங்கிய 3 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT