கைது செய்யப்பட்ட பூசாரி
கைது செய்யப்பட்ட பூசாரி `வருமானம் இல்லை; கோயில் நகையை அடகுவைத்துவிட்டேன்'- கைதான பூசாரி வாக்குமூலம்
தேசம்

`வருமானம் இல்லை; கோயில் நகையை அடகுவைத்துவிட்டேன்'- கைதான பூசாரி வாக்குமூலம்

காமதேனு

கோயிலில் காணிக்கையாக வழங்கப்பட்ட 1.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சிறுக சிறுக திருடிய பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த திருவான்மியூரில் அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் உள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக வழங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் வழங்கப்பட்ட காணிக்கைகள் குறித்து கோயில் தலைவர் விசாரித்தபோது கோயில் பூசாரி திருடப்பட்டுள்ளதாக நாடகமாடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பூசாரியிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் கோயில் நகைகளை சிறுக சிறுக கொள்ளையடித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். வருமானம் இல்லாததால் அந்த நகைகளை தனது வீட்டின் அருகில் உள்ள அடகு கடையில் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

அடகு கடையில் இருந்து நகைகளை மீட்டு கோயில் தலைவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். நகைகளை திருடிய பூசாரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT