நிலநடுக்கம்
நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா, ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானிலும் பூகம்பம்
தேசம்

பப்புவா நியூ கினியா, ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானிலும் பூகம்பம்

காமதேனு

பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல ஜப்பானின் ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சூழலில், அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பப்புவா நியூ கினியாவில் உள்ள மேற்கு நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் பகுதியை இன்று தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 38.2 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 02:14:52 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு வடகிழக்கே 273 கிமீ தொலைவில் 180 கிலோமீட்டர் ஆழத்திலும், 38.10 அட்சரேகையிலும், 73.39 தீர்க்கரேகையிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

அதேபோல, ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் சனிக்கிழமையன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக தேசிய புவி அறிவியல் மற்றும் பேரிடர் பின்னடைவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஹொக்கைடோவில் கடந்த திங்கள்கிழமை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT