யானை சவாரி சென்ற பிரதமர் மோடி 
தேசம்

பிரதமர் மோடி யானை சவாரி... அசாம் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்!

காமதேனு

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் யானை மற்றும் ஜீப் சவாரி மேற்கொண்டார்.

பிரதமர் மோடி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான, அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி இன்று முதல் முறையாக வருகை தந்தார்.

இந்த பூங்காவின் மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் பிரதமர் மோடி யானை சவாரி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அதே பகுதியில் ஜீப் சவாரியும் சென்றார். பிரதமருடன் பூங்கா இயக்குநர் சோனாலி கோஷ் மற்றும் பிற மூத்த வன அதிகாரிகள் உடன் சென்றனர்.

காசிரங்கா தேசிய பூங்காவில் ஜீப் சவாரி சென்ற பிரதமர் மோடி

அசாம் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை காசிரங்கா வந்தடைந்தார். ஜோர்ஹாட்டில் புகழ்பெற்ற அஹோம் ஜெனரல் லச்சித் பார்புகனின் 125 அடி உயர 'வீரச் சிலை'யை பிரதமர் மோடி இன்று மதியம் திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள மெலெங் மெடேலி போத்தருக்குச் செல்லும் பிரதமர், அங்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய, மாநில அரசு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், அதே இடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

SCROLL FOR NEXT