பிரதமர் மோடி
பிரதமர் மோடி மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தேசம்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

காமதேனு

கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் மாதிரி பயிற்சிகள் நடத்த வேண்டும் என்றும், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். சுவாச சுகாதாரம், கோவிட் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கும் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு இன்று நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து கடுமையான சுவாச நோய் மற்றும் இது தொடர்பான ஆய்வக கண்காணிப்பு, மரபணு சோதனை ஆகியவற்றின் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். கடந்த 24 மணி நேரத்தில், 1,134 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதனால் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,026 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்துக்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களின் தயார்நிலை, தடுப்பூசி பிரச்சாரத்தின் நிலை, புதிய கோவிட்-19 வகைகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வகைகள் மற்றும் அவற்றின் சுகாதார தாக்கங்கள் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலர், நாட்டின் இன்ஃப்ளூயன்ஸா நிலைமை குறித்து, குறிப்பாக கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான எச்1என்1 மற்றும் எச்3என்2 பாதிப்புகள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தார்.

SCROLL FOR NEXT