தேசம்

மக்களே உஷார்.. சென்னையை நெருங்குகிறது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

காமதேனு

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் வேகம் சற்று அதிகரித்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்போது சென்னைக்கு 340 கி.மீ தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.

மழை

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது, நேற்று (02.12.2023) நள்ளிரவு 23:30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடலில் புதுவைலிருந்து சுமார் 330 கி. மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையிலிருந்து சுமார் 340 கி. மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, வரும் 4 ஆம் தேதி திங்கட்கிழமை காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் மையமிடக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோரப்பகுதிகளை ஒட்டி வட திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே வரும் 5 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை கரையைகடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

SCROLL FOR NEXT