ஊராட்சி மன்றத்தலைவி மற்றும் செயலாளர்
ஊராட்சி மன்றத்தலைவி மற்றும் செயலாளர் `வீட்டு வரைப்பட அனுமதி வழங்க 15 ஆயிரம் லஞ்சம் கொடு'- கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி மன்றத் தலைவி, செயலாளர்
தேசம்

`வீட்டு வரைப்பட அனுமதி வழங்க 15 ஆயிரம் லஞ்சம் கொடு'- கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி மன்றத் தலைவி, செயலாளர்

காமதேனு

காஞ்சிபுரம் அருகே ஐயங்கார் குளம் கிராமத்தில் வரைபட அனுமதி வழங்க ரூபாய் 15,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி வேண்டா சுந்தரமூர்த்தியை காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புதுறையினர கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஐயங்கார் குளம் ஊராட்சி மன்ற தலைவராக வேண்டா சுந்தரமூர்த்தி ஊராட்சி பதவி வகித்து வருகிறார். இவர் அதிமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஐயங்கார்குளம் பகுதியில் வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். 

இதனை அடுத்து வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவதற்காக ஐயங்கார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்திடம் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் திட்டம் அனுமதி கொடுக்க வேண்டுமென்றால் லஞ்சமாக 15 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கிருஷ்ணமூர்த்தியை தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் ஐயங்கார்குளம் ஊராட்சி செயலாளராக உள்ள புவனா என்பவரும் தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம்புகார் அளித்துள்ளார்.

இதனை எடுத்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் காவல்துறையினர் திட்டமிட்டு, ரசாயன  தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கிருஷ்ணமூர்த்தியிடம் அளித்துள்ளனர். இதனை அடுத்து யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே போலீஸார் பதுங்கி இருந்துள்ளனர்.

அப்போது கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் பணத்தை தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி அறிவுறுத்தலின் அடிப்படையில், ஊராட்சி செயலர் புவனாவிடம் 15 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஐயங்கார்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT